உலகம்செய்திகள்

வருடாந்திர போர் ஒத்திகை செய்தது ஈரான்!!

ஈரானும், ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் அணு ஆயுத தவிர்ப்பு தொடர்பாக வியன்னாவில் எதிர்வரும் 29ஆம் திகதி நேரடி பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ள நிலையில், அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மஸ் நீரிணைக்கு அருகே, ஈரான் தனது வருடாந்திர போர் ஒத்திகையைத் தொடங்கியுள்ளது.இந்த போர் ஒத்திகையை தொடங்கியுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான போர் ஒத்திகை, எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

கமாண்டோக்கள் மற்றும் வான்வழி காலாட்படை உள்ளிட்ட படைப்பிரிவுகள் வருடாந்திர பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்டதாக அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இதில் போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள், இராணுவ போக்குவரத்து விமானம், நீர்மூழ்கிக்கப்பல்கள், ஆளில்லா விமானங்கள் இடம்பெற்றுள்ளன.

ஓமன் வளைகுடாவின் கடலோரப்பகுதியில் ஹார்முஸ் ஜலசந்தியின் கிழக்கே 386,100 சதுர மைல்கள் (1 மில்லியன் சதுர கிலோமீட்டர்) பரப்பளவில் கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகள் மற்றும் தரைப்படைகள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

‘சோல்ஃபாகர்-1400’ என அழைக்கப்படும் இந்த போர் ஒத்திகை, வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் மற்றும் சாத்தியமான படையெடுப்பை எதிர்கொள்வதில் தயார்நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மொத்த எண்ணெய்க் கப்பல்களில் கிட்டத்தட்ட 20 சதவீதம் ஓமன் வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு நீரிணை வழியாக செல்கிறது.

சர்வதேச வர்த்தக வழித்தடமாகப் பயன்படும் இந்தப் பகுதியில்தான், அண்மையில் அமெரிக்கா தனது பி-1பி லான்சர் ரக குண்டுவீச்சு விமானத்தைப் பறக்கச் செய்தது நினைவுகூரத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button