இலங்கைசெய்திகள்

கற்பகபுரம் வீதி காப்பற் வீதியாக மாற்றம்!!

கற்பகபுரம் வீதி காப்பற் வீதியாக மாற்றம். வவுனியா பம்பைமடு, கற்பகபுரம் வீதி காப்பட் வீதியாக மாற்றப்பட்டு இன்றையதினம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.


அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகள் புனரமைப்புத்திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் முன்மொழிவிற்கமைய வவுனியா பம்பைமடு கற்பகபுரம் வீதியும் உள்ளீர்க்கப்பட்டு திருத்தப்பணிகள் இடம்பெற்று வந்தது.


குறித்த 3 கிலோமீற்றர் நீளமான வீதியின் புனரமைப்பு பணிக்காக 61.66 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 
இன்றையதினம் மக்கள் பாவனைக்காக அது கையளிக்கப்பட்டது. இதன் மூலம் 450 குடும்பங்களைசேர்ந்த 1400 பேர் பலனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் பிரதிநிதி மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button