இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது .

குறித்த விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது

வவுனியா ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்தீபனால் குறித்த முறைப்பாடு நேற்றையதினம் (09) மேற்கொள்ளப்பட்டுள்ளது . தன்னை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து 07. 11.2021 அன்று குருமன்காடு காளி கோவிலுக்கு அருகிலுள்ள நகரசபைக்குச் சொந்தமான பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கட்டடம் குறித்த செய்தி சேகரிக்க சென்ற சம்பவங்கள் தொடர்பான வாக்கு மூலம் பெற்று கொண்டுள்ளதாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை தன்மீது சுமத்தி தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேபோன்ற ஒரு நடவடிக்கை கடந்த முறையும் இடம்பெற்றுள்ளதாகவும் இரண்டாவது தடவையாகவும் தன்னை இலக்கு வைத்து குறித்த வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் இதற்கு எதிராகவே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை நேற்றையதினம் இலங்கை பொலிஸ்மா அதிபருக்கும் வவுனியா தலைமை பொலிஸ் அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button