இலங்கைசெய்திகள்

24 மணி நேரத்தில் 41.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு!!

08 .11.2021 காலை 8.30 மணி முதல் 09.11.2021 காலை 8.30 மணிவரையான நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் 41.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவதானிப்பாளர் தா . சதானந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையின் அதிக மழை வீழ்ச்சி இது என்பதுடன் இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இன்று காலை 8.30 மணிவரை நிறைவடைந்த காலப்பகுதியில் 1230 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இக்கால நிலை மாற்றம் இன்னும் சில தினங்கள் நீடிக்கும் என மேலும் அவர் தெரிவித்துள்ளார் .

வவுனியாவில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கன மழையினால் மக்களின் இயல்பு நிலைமைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தாழ் நிலப்பகுதிகளில் மழை வெள்ளத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் .

தொடர்ந்து பெய்துவரும் மழையினால் தாழ் நிலப்பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளதுடன் பயிர் நிலங்களின் மழை வெள்ளம் பகுந்துள்ளதையும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்துள்ளது .

Related Articles

Leave a Reply

Back to top button