இலங்கை பொறியியல் கல்வி நிறுவகத்தினால், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர் அணிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட புத்தாக்க கண்டுபிடிப்பாளர் போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் அணி பிரபலமான கண்டுபிடிப்புக்கான முதலாம் பரிசைப் பெற்றுள்ளது .
மாணவர்களிடையேயான புத்தாக்க ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையில் இலங்கை பொறியியல் கல்வி நிறுவகம் The Institution of Engineers Sri Lanka (IESL) நடாத்திய இளமாணி மாணவர் புத்தாக்கப் போட்டியில் (Undergraduate Inventor of the Year – UIY ) யாழ்ப்பாண இலங்கை பொறியியல் கல்வி நிறுவகத்தின் யாழ். பல்கலைக்கழக பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்ட உணவுக் கழிவுகளில் இருந்து லஞ்ச் சீற்றைப் பிரித்தெடுக்கும் பொறி ( Lunch Sheet Separator from food waste) முதலாம் இடத்தைப் பெற்று பிரபலமான கண்டுபிடிப்புக்கான விருதுக்குரியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.