இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

அரசியலில் களமிறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மகன்! விரைவில் தேர்தலிலும் போட்டி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) மகன் தஹம் சிறிசேன (Daham Sirisena) அரசியலில் உத்தியோகபூர்வமாக களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொலன்னறுவை மாவட்ட இளைஞர் அணியின் தலைவராக தஹம் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான கூட்டமொன்று நேற்றைய தினம் மின்னேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தஹம் சிறிசேன அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button