டைட்டானிக்கின் சிதைவுகளை நோக்கி சென்ற நீர்மூழ்கியின் சிதைவுகளிற்குள் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நீர்மூழ்கியின் சிதைவுகளிற்குள் மனித எச்சங்கள் என கருதப்படுபவை காணப்படுகின்றன என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைப் பார்வையிட டைடன் என்ற நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த 5 சுற்றுலாப் பயணிகளும் கடந்த 23 ஆம் திகதி உயிரிழந்துள்ளனர்.
ஓஷன்கேட் நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த நீர் மூழ்கிக் கப்பலில் 5 செல்வந்தர்கள் கடந்த 18 ஆம் திகதி அழைத்துச் செல்லப் பட்டிருந்த நிலையில், கப்பல் புறப்பட்டு 1 மணி நேரம் 45 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
இதனையடுத்து தேடுதல் பணியானது தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 22 ஆம் திகதி மாலை அமெரிக்கக் கடலோரப்படை, டைட்டானிக் தளத்தைச் சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் டைட்டனின் ஐந்து பெரிய துண்டுகளை கண்டுபிடித்ததாகக் கூறியது.
இதனையடுத்து நீர்மூழ்கியின் அழுத்த அறை வெடித்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர்கள் ஐவரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.