இந்தியாசெய்திகள்விளையாட்டு

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிற்கு வந்த சோதனை!

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையுறுதிக்கு தகுதி பெற வேண்டுமென்றால் அவர்கள் எதிரில் ஒரு பெரும் சவால் காத்துள்ளது தெரியவந்துள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சூப்பர் 12-சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.

இதன் காரணமாக தற்போது இந்திய அணி இந்தத் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறுவதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மொத்தம் 12 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு தலா 5 போட்டியில் விளையாடும் படி அட்டவணை உள்ளது.

அதன்படி குரூப் ஏ-வில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் விளையாடுகின்றன. குரூப் பி-யில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

இதில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமெனில் குறைந்தது மூன்று போட்டிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே தற்போது பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளதால் இன்னும் 4 ஆட்டங்கள் மட்டுமே மீதியுள்ளன.

அதில் நியூசிலாந்தை தவிர்த்து நமீபியா, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை இந்திய அணி எளிதில் வீழ்த்தினாலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும். இல்லையெனில் ரன்ரேட் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை தவற விட வாய்ப்பு உள்ளது.

அதே வேளையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்திய அணியை வீழ்த்தி மீதமுள்ள மூன்று அணிகளும் வீழ்த்தும் வேளையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இதனால் இறுதியில் இந்திய அணி வெளியேறவும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி இந்திய அணிக்கு கடும் விஷப்பரீட்சை எனவும் அதில் ஜெயித்தே ஆக வேண்டிய நிலை வரலாம் எனவும் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button