ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாக அரச பங்காளிக் கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுதந்திரக் கட்சி உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கூறியதாவது:-
“ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் மாநாடுதான் நேற்று அநுராதபுரத்தில் நடைபெற்றது. மாநாட்டை நடத்தும் உரிமை அக்கட்சிக்கு இருக்கின்றது. அம்மாநாட்டில் எனக்கு உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறுகின்றனர். அது மொட்டு கட்சி மாநாடாகும். நான் சுதந்திரக் கட்சி உறுப்பினர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
எது எப்படி இருந்தாலும் ஶ்ரீலங்கா பொஜன முன்னணி கட்சிக்கு எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்” – என்றார்.
அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுவதற்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற கேள்வியை ஐக்கிய மக்கள் சக்தி, சபையில் இன்று துமிந்த திஸாநாயக்கவிடம் எழுப்பியிருந்தது.