இலங்கைசெய்திகள்

பயங்கரவாதச் சட்டத்தை நீக்கக் கோரி சந்திரிகாவும் சம்பந்தனும் கையெழுத்து!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரி அதற்கான மனுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் இன்று கையெழுத்திட்டனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பலர் கைதுசெய்யப்பட்டு விசாரணை இன்றி நீண்டகாலமாகச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதுடன் மிகவும் மோசமான சட்ட ஏற்பாடுகளைக் கொண்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அதற்கமைய கிராமங்கள் தோறும் குறித்த கையெழுத்துப் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி அதற்கான மனுவில் கையெழுத்திட்டனர்.

இந்தக் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று நடைபெற்றது.

Related Articles

Leave a Reply

Back to top button