கல்விமுக்கிய செய்திகள்

கருத்தரங்கு வினாத்தாள் 24.12.2021 – 25.12.2021

கருத்தரங்குக்கான அறிவுறுத்தல்கள்
(பெற்றோர்களுக்கானது)

1, கருத்தரங்கிற்கான வினாத்தாள்கள் கருத்தரங்கிற்கு முந்தைய தினம் காலை எமது இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதன் லிங் எமது கருத்தரங்கு வட்ஸ்அப் குழுவில் பதிவிடப்படும்.

2, கருத்தரங்கு வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து (டவுண்லோட்) பிறின்ட் எடுக்க வேண்டும்.

3, அதன்பின்பு அவ் வினாத்தாளில் குறிக்கப்பட்டுள்ள நேரங்களை ஒதுக்கி உங்கள் மேற்பார்வையில் உங்கள் பிள்ளைகளை பரீட்சை போல் செய்வித்தல் வேண்டும்.

4, கருத்தரங்கின் போது உரிய வளவாளர்கள் அரச பரீட்சை வினாத்தாள்களை அணுகும் முறைகளையும் கூடிய புள்ளிகள் எடுக்கும் நுட்பங்களையும் வினாக்களுக்கான சரியான விடைகளையும், அவற்றுக்கான விடை காணும் விளக்கங்களையும் வழங்குவார்கள். அனைத்தையும் சரியான முறையில் மாணவர்களை செவிமடுக்க செய்யவும்.


5, பகுதி 1,பகுதி 11 கருத்தரங்கு நிறைவடையும் சந்தர்ப்பத்தில் மாணவர்களுக்கு 10 நிமிடம் சந்தர்ப்பம் வழங்கப்படும். அவ்வேளை மாத்திரம் மாணவர்கள் சந்தேகங்களை, விளங்காத வினாக்களுக்கான விடை கானும் விளக்கத்தை மீள கேட்க முடியும்.

6, மாணவர்கள் தங்களது மைக்கை தொழிற்படா நிலையில் வைத்து கருத்தரங்கிற்கு இடையூறு ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். இடையூறு ஏற்படுத்தும் மாணவர்கள் உடன் சூம் தொடர்பிலிருந்து துண்டிக்கப்படுவார்கள்.

7, வளவாளர்கள் வினாத்தாள்களுக்கு விளக்கமளிக்கும் போதே மாணவர்கள்/ பெற்றோர்கள் புள்ளியிட்டு மொத்த புள்ளியை அறிய வேண்டும் .

8, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் மாணவர்களின் அருகில் அமர்ந்திருந்து அவர்களுக்கு ஒத்தாசை புரிவதுடன் கருத்தரங்கை செவிமடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.


9, ஒவ்வொருநாளும் முன்னைய தினம் இரவு அல்லது குறித்த நாள் காலை கருத்தரங்கிற்கான சூம் லிங் பாஸ்வேட் என்பன வட்ஸ்அப் குழுவில் இடப்படும். அதன்மூலம் கருத்தரங்கில் இணைந்துகொள்ள முடியும்.
இந்த கருத்தரங்கானது

10, உங்கள் நலன் கருதி பெருமளவான பணச்செலவுடன் ஐவின்ஸ்தமிழ் . கொம் செய்தி இணையதளத்தின் ஏற்பாட்டில் நடைபெறுவதால் ஒருநாளைக்கு ஐந்து முக்கிய செய்திகள் அல்லது விழிப்புணர்வு பதிவுகள் உங்கள் குழுவில் பதிவிடப்படும். அந்த லிங்கை அழுத்தி அன்றாடம் எமது செய்தி தளத்தினை பார்வையிட்டு இதற்கு பலம் சேர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டு நிற்கின்றோம்.

கருத்தரங்கு
பொறுப்பாசிரியர்

Related Articles

Leave a Reply

Back to top button