கல்வி

ஐவின்ஸ் இணையத் தளத்தின் மற்றுமொரு கல்விப்பணி

க.பொ.சா.தாரண மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு

1000 க்கு மேற்பட்ட மாணவர்களை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைய வழிகாட்டிய ஐவின்ஸ் இணையத்தளம் க.பொ.சா.தர மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கை ஆரம்பிக்கின்றது.

மாணவர்களின் பெறுபேற்றினை அதிகரிக்க வேண்டும் என்ற சிந்தனையில் ஐவின்ஸ் செய்தி இணையத்தளம் தரம் – 5 மாணவர்களுக்கு நடத்தி வந்த சூம் செயலி மூலமான இலவசக் கருர்தரங்கின் நோக்கம் சிறப்பே நிறைவேறியதன் பொருட்டு இன்னுமொரு பணியை முன்னெடுக்க ஐவின்ஸ் தயாராகின்றது.

அவ்வகையில் 2021 மே மாதம் இடம் பெறவுள்ள கல்விப் பொதுசாதாரண மாணவர்களுக்கான இலவச சூம் செயலி மூலமான கருத்தரங்கை ஐவின்ஸ் இணையத்தளம் ஒழுங்கமைக்கின்றது.

இக் கருத்தரங்கை இலங்கையின் முன்னணி வளவாளர்கள் நடத்த உள்ளனர்.

இக்கருத்தரங்கில் தேசிய ரீதியில் அனைத்து மாணவர்களும் பங்கு பற்ற முடிவதுடன், முற்று முழுதாக இலவச கருத்தரங்காக ஒழுங்கமைக்கப்படுகின்றது.

பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் விளம்பர பதாகையில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை அனுப்பி வைப்பதன் மூலம் இக்கருத்தரங்கில் பங்கு பற்றமுடியும்.

Related Articles

Leave a Reply

Back to top button