வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நாட்டின் பிரதான 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும 24 மணிநேரத்தில் இந்த மாவட்டங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல், மேல் சப்ரகமுவ மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்கள் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும்.
எதிர்வரும் 24 மணிநேரத்தில் வடமேல்,மேல், சப்ரகமுவ ஆகிய மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும்,
வட மாகாணத்திலும் மாத்தளைஇ காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் ஒருசில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றர் மழைவிழ்ச்சி பதிவாகுமென வளிமண்டளவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்பட கூடிய தற்காலிகமான கடும் காற்று மற்றும் மின்னல் என்பவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்பை குறைத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கோரியுள்ளது.