இலங்கைசெய்திகள்

காணி சுவீகரிப்பிற்கு எதிரான ஒன்றுகூடல்!!

புங்குடுதீவில் கடற்படைக்கு காணி சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அனைவரையும் ஒன்று திரளுமாறு பிரதேசசபை உறுப்பினர் நாவலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புங்குடுதீவில் கடற்படையினருக்கு காணிசுவீகரிக்கும் நடவடிக்கை நாளையும் (08) நாளைமறுதினமும் (09) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.புங்குடுதீவு வல்லன் பகுதியில் உள்ள பொதுமக்களின் காணிகள் நாளை கடற்படையினருக்கு சுவீகரிக்கப்படவுள்ளதாகவும் நாளை மறுதினம் புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கடற்கரையைக்கு அண்மையில் மணியம் தோட்ட வீதிக்கு அண்மித்த பகுதியில் காணி சுவீகரிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த காலங்களிலும் இக்காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிப்பதற்கு எடுத்த நடவடிக்கைகள் பொதுமக்கள் மற்றும் அரசியல் வாதிகளின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் மீண்டும் இக்காணிகள் கடற்படையினருக்கு சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மேற்கொள்ளப் படவிருக்கும் பொதுமக்களின் காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியில் வாதிகள் அனைவரையும் ஒன்று திரளுமாறு வேலணை பிரதேசசபை உறுப்பினரும் தமிழரசுகட்சியின் ஊர்காவற்றுறை செயலளாருமான கருணாகரன் நாவலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button