இலங்கைசெய்திகள்தொழில்நுட்பம்

இலங்கையின் வைபர் பயனர்களுக்கு நிறுவனம் வழங்கியுள்ள உறுதிமொழி

வைபர் (Viber) என்னும் தொடர்பாடல் செயலியை பயன்படுத்தும் இலங்கை பயனர்களுக்கு அந்த நிறுவனம் உறுதிமொழியொன்றை வழங்கியுள்ளது.

தரவு பாதுகாப்பு மற்றும் தரவு அந்தரங்கத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என நிறுவனம் உறுதிமொழி வழங்கியுள்ளது.

வைபரின் புதிய உற்பத்தியொன்றை அறிமுகம் செய்யும் இணைய வழி நிகழ்வு ஒன்றில் அந்த நிறுவனத்தின் அபிவிருத்தி அதிகாரி அனா ஸனாமென்ஸ்காயா (Anna Znamenskaya) தெரிவித்துள்ளார்.

வைபர் லென்ஸ்களை இலங்கையில் அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

வைபர் ஊடாக பரிமாறப்படும் தகவல்கள் மறைகுறியாக்கப்பட்ட (encrypted) அடிப்படையில் பகிரங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

எனவே இந்த தகவல்களை மூன்றாம் தரப்பு ஒருவரினால் பார்வையிடவோ செவிமடுக்கவோ முடியாது என இலங்கை பயனர்களுக்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைபர் நிறுவனத்தின் அதிகாரிகளினாலும் இரு நபர்களுக்கு இடையிலான அந்தரங்க தகவல் பரிமாற்றத்தை பார்வையிட முடியாது என தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் உலகம் முழுவதிலும் பெருந்தொற்று காலத்தில் வைபர் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button