எரிபொருள் அட்டை நடைமுறையின்படியே எரிபொருள் வழங்கப்படும்- நுணாவில் IOC எரிபொருள் நிரப்ப நிலைய உரிமையாளர் தெரிவிப்பு.
நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள் அந்தவகையில் அனைத்து மக்களுக்கும் எரிபொருள் கிடைக்கும் வண்ணம் புதிய எரிபொருள் அட்டை நடைமுறையின்படி பின்வரும் நடைமுறையின் கீழ் மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படுமென நுணாவில் IOC எரிபொருள் நிரப்ப நிலைய உரிமையாளர் தெரிவிப்பு.
அந்தவகையில் கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டை உள்ளவர்களுக்கு மாத்திரம் நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வருகின்ற திங்கட்கிழமை
மற்றும் செவ்வாய் கிழமைகளில் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட J288 தொடக்கம் J300 வரையான கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு பெட்ரோல் வழங்கப்படும் என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
வருகின்ற திங்கட்கிழமை
J-288
J-289
J-290
J-291
J-292
J-293
J-294
கிராம சேவகர் பிரிவிற்கும்
வருகின்ற செவ்வாய்க்கிழமை
J-295
J-296
J-297
J-298
J-299
J-300
கிராமசேவையாளர் பிரிவிற்கும் எரிபொருள் வழங்கப்படுமென தெரிவித்தார்.
அத்துடன் மேல் காணப்படும் கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட இடங்களில் வசிக்கும் மக்கள் எரிபொருள் அட்டை பெற்றுக் கொள்ளாது இருந்தால் உங்கள் கிராமசேவகரை தொடர்புகொண்டு எரிபொருள் அட்டையினை பெற்றுக்கொள்ளுங்கள் எனவும்.
ஏற்கெனவே மேல் காணப்படும் கிராமசேவகர் பிரிவில் எரிபொருள் அட்டையினை பெற்று எரிபொருளினை பெற்றுக்கொண்டவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது எனவும் தெரிவித்தார்.
மேலும் ஏனைய கிராமசேவையாளர் பிரிவுகளுக்குட்பட்ட மக்களுக்கு அடுத்து வரும் கிழமை நாட்களில் படிப்படியாக எரிபொருட்கள் வழங்கப்படுமென தெரிவித்ததுடன.
கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டையை கொண்டுவருபவர்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படுமெனவும் அட்டை கொண்டு வராதவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது எனவும் தெரிவித்தார்.