இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பாடசாலைகளை திறப்பது நோய்த் தொற்றை பரவச் செய்யும்: – நிபுணர்கள் எச்சரிக்கை

பாடசாலைகளை திறப்பது நோய்த் தொற்றை பரவச் செய்யும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாடசாலைகள் கிரமமாக ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில் மாணவர்களின் ஊடாக சமூகத்திற்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளனர்.

கோவிட் தடுப்பூசி மூலம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என நினைப்பதனை விடவும், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் (Dr. Hemantha Herath) தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றுகை தனி நபரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும் ஒர் சமூகத்தையே பாதுகாக்காது எனவும் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையான நாடுகளில் பாடசாலை பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களாக இருந்தாலும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button