யாழ்ப்பாணம் குடாநாட்டிலும் எண்ணெய்வளங்கள்!
யாழ்ப்பாணம் குடாநாட்டின் மத்தியப் பகுதியொன்றில் எண்ணெய்வளங்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இந்த எண்ணெய்வளத்தை ஆராயும் பணிகளை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நிலத்தடியில் எண்ணெய்ப்படிமங்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அரச மட்டத் தகவல்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதன் ஆராய்ச்சிகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மன்னார், பேசாலைப் பகுதியில் எம்2 என அழைக்கப்படும் காவிரி பள்ளத்தாக்கில் 2000 மில்லியன் பீப்பாய்கள் கனிய எண்ணெய் வளம் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் உதய கம்மன்பில் இதனை தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது யாழ்ப்பாணத்திலும் எண்ணெய்வளம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.