இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

நவம்பர் 20 போரினால் இறந்தோர் நினைவு நாள்: வடக் கு, கிழக்கு ஆயர்கள் பேரவை அறிவிப்பு

இவ்வருடம் நவம்பர் 20ஆம் திகதி சனிக்கிழமையைப் போரினால் இறந்தவர்களுக்காக மன்றாடுகின்ற சிறப்பு நாளாகக் கடைப்பிடிக்குமாறு வடக்கு – கிழக்கு ஆயர்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

வடக்கு – கிழக்கு ஆயர்கள் பேரவை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த அழைப்பை விடுத்துள்ளது. அன்றைய தினம் போரில் ஈடுபட்ட தரப்பினர், போரினால் இறந்துபோன மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், அரச பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து இறைவேண்டல் புரிய ஆயர்களாகிய நாம் அழைப்பு விடுக்கின்றோம் என்று வடக்கு – கிழக்கு ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது.

திருகோணமலை ஆயர் வண.நோயல் இம்மானுவேல் ஆண்டகை, யாழ். ஆயர் வண. ஜஸ்ரின் பேனார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மன்னர் ஆயர் வண. இமானுவேல் பெர்ணாண்டோ ஆண்டகை, மட்டக்களப்பு ஆயர் வண.ஜோசப் பொன்னையா ஆண்டகை ஆகியோர் கையெழுத்திட்டு மேற்படி அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button