முல்லை மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த மாணவிகள் இந்திய துணைத்தூதுவரால் கெளரவிப்பு
முல்லை மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த மாணவிகள் இந்திய துணைத்தூதுவரால் கெளரவிப்பு இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஆசாதிக அம்ரித்மஹோத்ஸவ் கொண்டாட்டத்தின் ஒரு தொகுதியாக இந்திய துணை தூதரகம் வடக்கு மாகாண கல்வி கலாச்சார அலுவல்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுடன் இணைந்து வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள மாணவர்களுக்கான கட்டுரை போட்டி ஒன்றினை இணையவழியில் நடத்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்
முதலாம் இடத்தினை செல்வி சுப்பிரமணியம் சுடர்ச்செல்வி புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் தரம் 13 படிக்கும் மாணவியும் இரண்டாம் இடத்தினை செல்வி மயில்வாசன் தினேகா மல்லாவி யோகபுரம் மகாவித்தியாலயத்தில் தரம் 13 படிக்கும் மாணவியும்
மூன்றாம் இடத்தினை செல்வி சசிக்குமார் ஷர்மிகா உடையார் கட்டு மகாவித்தியாலயத்தில் தரம் 13 படிக்கும் மாணவிகள் முல்லைத்தீவு மாவட்த்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.இவர்களுக்கான கௌரவமாக சான்றிதழும் 5 ஆயிரம் ரூபா பணமும் நேற்று 13.10.21 முல்லை வலயத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது.