இலங்கைசெய்திகள்

மட்டுவில் மோகனதாஸ் ஐரோப்பா கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம்!!

மட்டுவில் மோகனதாஸ் ஐரோப்பா கிளையின்
வருடாந்த பொதுக்கூட்டம் 31-10-2021 அன்று
மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது
மோகனதாஸ் சனசமூக நிலைய நிர்வாகிகள் கலந்துகொண்டதுடன்
ஐரோப்பா நாட்டிலிருந்து (online) ஊடாகவும் உறவுகள்
இணைந்து சிறப்பித்ததுடன் 2022 ற்குரிய புதிய நிர்வாகமும்
புதிய பரிமாணத்துடனும் புதிய மாற்றங்களுடனும் ஏகமனதாகத்
தெரிவு செய்யப்பட்டது. மோகனதாஸ் ஐரோப்பா கிளையின் புதிய ஆலோசகர் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.தலைவராக குணரத்தினம் பிரஜிப்பும் (swiss)
உபதலைவராக சின்னராசா தயாளனும் (germany)
செயலாளராக சிவராசா சந்திரகாந்தியும் (சந்திரா ) (swiss)
உபசெயலாளராக விஐயகுமார் துஷாந்தனும் ( நந்தன் ) (france)பொருளாளராக இராசேந்திரன் அருந்தவச்செல்வனும் (swiss) தெரிவுசெய்யப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து அண்மையில் ஐரோப்பா நாட்டில் காலமானவர்களான
சின்னையா சுப்பிரமணியம் மற்றும் சர்வா நந்தினி இருவருடனும்
எமது மட்டுவில் கிராமத்தில் காலமான அனைவரையும்
நினைவுபடுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதுவரை நிர்வாகத்தினை மிகவும் சிறப்பானமுறையில் நடத்திய மோகனதாஸ் ஐரோப்பா கிளையின் பழைய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் கூறப்பட்டதுடன் ஒன்றுபட்டு உயர்வோம் என்னும் எமது தாரக மந்திரத்திற்கமைய புதிய நிர்வாக செயற்பாடுகளுக்கும் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button