“நாட்டின் தற்போதைய நிலைமையில் அமைச்சுப் பதவிகளில் இருப்பர்வர்களை நீக்குவது உசிதமான காரியமல்ல.”
– இவ்வாறு கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி நிலைமையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நல்லிணக்கத்துடன் பயணிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்துக்கொண்டு தேசிய அமைப்பை உருவாக்கி நாடு தற்போது எதிர்கொண்டு இருக்கும் நெருக்கடி நிலைமையில் இருந்து மீண்டெழுவதற்காக நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய நேரமே இது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில், அமைச்சுப் பதவிகளில் இருப்பர்வகளை நீக்குவது உசிதமான காரியமல்ல.
வெளியில் இருப்பவர்களையும் இணைத்துக்கொண்டு நல்லிணக்கத்துடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” – என்றார்.