சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவுறுத்தியுள்ளார்.
இன்று அதிகாலை வந்த ஆயுததாரிகள் தனது வீட்டின் மீது கற்கள் மற்றும் கழிவுகள் அடங்கிய பொதிகளை வீசி தாக்கினர் என்று சமுதித சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல தடவைகள் துப்பாக்கிச் சத்தங்களும் கேட்டன எனவும் அவர் கூறினார்.
கல்கிஸை பொலிஸ் நிலையத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் 3 பொலிஸ் குழுக்கள் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.