இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்முக்கிய செய்திகள்

மன்னாரில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! – விபத்தா? கொலையா? எனப் பொலிஸார் விசாரணை

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பள்ளமடு – விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில் இன்று காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சன்னார் கிராமத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான கே.பாஸ்கரன் (வயது 33) என்பவரே சடலமாக மீட்கப்படுள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் தனது வீட்டிலிருந்து நேற்று விடத்தல் தீவு கிராமத்துக்குச் சென்றுவிட்டு மீண்டும் தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பியுள்ளார்.

இந்தநிலையிலே குறித்த குடும்பஸ்தர் இன்று தகாலை குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்துக்கு அருகில் இருந்து அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு வந்த அடம்பன் பொலிஸார் இது விபத்தா? அல்லது கொலையா? என்பது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button