“அரசிலிருந்து வெளியேறுவதாக இருந்தால் தாராளமாக உடனே வெளியேறலாம்” என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.
“சுசில் பிரேமஜயந்தவாக இருக்கட்டும், மைத்திரிபால சிறிசேனவாக இருக்கட்டும், அரசில் இருப்பதாக இருந்தால் அரசின் கொள்கைகளை ஏற்க வேண்டும். விமர்சனங்கள் இருந்தால் அரசுக்குள் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். அதைவிடுத்து வெளியில் சென்று விமர்சிப்பது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.
இருக்க முடியுமென்றால் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசிலிருந்து உடனே வெளியேற வேண்டும்” என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.
அத்துடன், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசிலிருந்து வெளியேறினால்கூட தமக்குப் பாதிப்பில்லை என்று மொட்டு கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.