இலங்கை
ஆறுகளை அண்மித்த வீடுகளை அகற்ற நடவடிக்கை! – அமைச்சர் அமரவீர தெரிவிப்பு
நாட்டில் ஆறுகளை அண்மித்துள்ள வீடுகளை அகற்றி அவற்றைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், நதிகளை மாசுபடுத்துவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டிலுள்ள 10 ஆயிரத்து 733 ஆறுகள் மாசடைந்துள்ளன எனவும், அவற்றில் 1,474 இடங்கள் களனி ஆற்றை மாசுபடுத்தும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி இம்முறை ‘சுரகிமு கங்கா’ (நதிகளைப் பாதுகாப்போம்) திட்டத்தின் கீழ் களனி ஆற்றைச் சுத்தப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.