இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

உள்ளூர் பால்மாக்களின் விலையும் அதிகரிப்பு!

உள்ளூர் பால்மாக்களின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மில்க்ரோ நிறுவனம் 400 கிராம் பால்மா பொதியின் விலையை, 470 ரூபா வரையில் அதிகரிக்க அவதானம் செலுத்தியுள்ளதாகவும் எனினும், இதுதொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பெல்வத்த நிறுவனம் 400 கிராம் பால்மா பொதியின் விலையை 460 ரூபாயென விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டொலர் தொடர்பான பிரச்சினை தொடர்பில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மா பொதியின் விலையை 250 ரூபாவினால் அதிகரிக்க கடந்த 09 ஆம் திகதி பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது!

Related Articles

Leave a Reply

Back to top button