இலங்கைசெய்திகள்

பஸிலின் டில்லி விஜயத்துக்கு முன் மோடிக்குப் பறந்தது முக்கிய கடிதம்!

இலங்கைக்கு இந்தியா வழங்க இருக்கின்ற பொருளதார நிவாரண உதவிப்பொதிக்கு முன்னராக
இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ள பொருளாதார நிவாரணப் பொதியை முறைப்படுத்துவதற்கு இலங்கையின் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச புதுடில்லிக்குச் செல்லவுள்ள நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடிதமொன்று புதுடில்லிக்குச் சென்றுள்ளது.

கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையை மீட்டெடுக்கும் முகமாக அத்தியாவசியப் பொருட்களுக்கும் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யவும் உணவு இறக்குமதிக்காகவும் மற்றும் அந்நிய செலவானி இருப்பைக் கட்டியெழுப்பவும் 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியாக கடனாக வழங்கவுள்ளது.

இந்நிலையில், இலங்கைக்கான இந்தியாவின் நிவாரண நிதியுதவிகள் செயலாக்க உறுதிப்பாட்டின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் எனப் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் 1.4ம் சரத்தில் குறிப்பிட்டவாறுஇ இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகம் என்பதனை உறுதியான செயலாக்க உத்தரவாதத்துடனேயேஇ சிறிலங்காவுக்கான எந்தவொரு உதவிகளும் வழங்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் மூன்று முக்கிய விடயங்களை உறுத்திப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைச் செயலாக்க வேண்டும், இலங்கைத் தீவின் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்த வேண்டும், தமிழர் பகுதிகளுடன் சிங்களக் கிராமங்களை இணைத்து தமிழர் பகுதிகளின் எல்லை வரையறை செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் வி.உருத்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button