செய்திகள்விளையாட்டு

கென்ய தடகள வீராங்கனை குத்திக் கொலை ; கணவர் தலைமறைவு

கென்ய ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரரும், இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்றவருமான ஆக்னஸ் டிரோப் அவரது வீட்டில் கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

25 வயதான ஆக்னஸ் டிரோப் (Agnes Tirop) கென்யாவின் மேற்கு நகரமான இட்டனில் உள்ள அவரது வீட்டில் வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை தொடர்ந்து அவரது கணவர் தலைமறைவாகியுள்ளார். முதற்கட்ட விசாரணையில் ஆக்னஸ் டிரோப்பின் கணவரால் இந்த கொலை முன்னெடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

அதேநேரம் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளும் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆக்னஸ் டிரோப், 2017 மற்றும் 2019 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் மகளிர் 10,000 மீட்டரில் வெண்கலப் பதக்கங்களை வென்றார்.

மேலும் டோக்கியோ ஒலிம்பிக்கில் 5,000 மீட்டரில் நான்காவது இடத்தைப் பிடித்தார். கடந்த மாதம், ஜெர்மனியில் பெண்களுக்கான 10 கிலோமீட்டர் சாலைப் போட்டியில் உலக சாதனையை முறியடித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button