கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தமிழக யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அதற்கமைய, அருட்தந்தைகளின் பங்கேற்புடன் மாத்திரம் திருவிழாவை நடத்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“500 பக்தர்களை அனுமதிப்பதாக யாழ். மாவட்டம் ரீதியாக தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும், இம்முறை யாத்திரிகர்களை அனுமதிப்பதில்லை எனவும், அருட்தந்தைகளின் பங்கேற்புடன் மாத்திரம் திருவிழாவை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சரவைக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்” என்றார்.