இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்முக்கிய செய்திகள்

கறுப்புப்பட்டியுடன் யாழ். ஊடகவியலாளர்கள்!

ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கும் ஊடகவியலாளருக்கு இடையில் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு ஊடகவியலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்து சென்றனர்.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதியிலுள்ள ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை, கொலை செய்யப்பட்டமை மற்றும் தாக்கப்பட்டமை தொடர்பில் இதுவரை நீதி கிடைக்காமையை எடுத்துக் காட்டும் முகமாகவே கலந்துரையாடலுக்கு யாழ். ஊடகவியலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்து சென்றிருந்தனர்.

ஊடகவிலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்திருந்ததை அவதானித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும நானும் ஒரு ஊடகவியலாளனாக மூன்று பத்திரிகைகளில் கடமையாற்றியதாகக் குறிப்பிட்டு ஊடகவியலாளர்களின் ஜனநாயகக் கோரிக்கைக்குத் தான் மதிப்பளிப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன் அவர்களின் நிஜயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button