LPL போட்டிகளில் விளையாடுகின்றாரா ரோஹித்த ராஜபக்ச?
இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா பிரிமியர் லீக் அல்லது எல்.பீ.எல். போட்டித் தொடரில் விளையாடும் திட்டமில்லை என பிரதமரின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச (Rohitha Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இந்த போட்டித் தொடரில் விளையாட உள்ளதாகவும் கிரிக்கட் நிர்வாகத்தில் ஈடுபட உள்ளதாகவும் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் சமூக ஊடகங்களில் தம்மை தொடர்புபடுத்தி வெளியிடப்பட்ட இந்த தகவல்கள் பிழையானவை என தெரிவித்துள்ளார். தாம் ரகர் விளையாடி வருவதாகவும் Rugby 7’s போட்டித் தொடருக்காக ஆயத்தமாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சென் தோமஸல் கல்லூரியின் பழைய மாணவர் அணியின் சார்பில் தாம் கிரிக்கட் விளையாடுவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், எல்.பி.எல் போட்டித் தொடரில் விளையாடவோ கிரிக்கட் நிர்வாகங்களில் ஈடுபடவோ எவ்வித உத்தேசமும் கிடையாது என தெரிவித்துள்ளார்.