இந்தியாசெய்திகள்விளையாட்டு

இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகும் ட்ராவிட்

ஐக்கிய அமீரகத்தில் நடந்து வரும் 20க்கு 20 உலகக் கிண்ணப்போட்டிகளுக்கு பின்னா் பின்னர், இந்திய தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரிக்கு பதிலாக ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிராவிட்டின் இரண்டு வருட பதவிக்காலம் வரும் நவம்பர் 17-ம் ஆம் திகதி ஆரம்பமாகும். நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இடம்பெறும் தொடருடன் ட்ராவிட்டின் பதவி ஆரம்பமாகிறது.

இந்தநிலையில் “இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது தமக்கான ஒரு முழுமையான மரியாதை,

இந்த பாத்திரத்தை தாம் மிகவும் எதிர்பார்ப்பதாக ட்ராவிட் தொிவித்துள்ளாா்.

இந்தியா ஏ மற்றும் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டவா் அணியின் பயிற்சியாளராக ட்ராவிட் பணியாற்றி வருகிறாா்.

Related Articles

Leave a Reply

Back to top button