இந்தியாசெய்திகள்

2 ரூபாய்க்கு பரோட்டா விற்கும் 70 வயது தாத்தா!

விலையேறிக் கொண்டே போகும் இந்த காலத்திலும் வெறம் 2 ரூபாய்க்கு பரோட்டா விற்றுக் கொண்டிருக்கிறார் தமிழகத்தின் நாகர்கோவிலை சேர்ந்த பாலகிருஷ்ணன்.

நாகர்கோவிலின் வஞ்சியாதித்தன் புதுத்தெருவில் இயங்கி வருகிறது பாலகிருஷ்ணனின் பரோட்டா கடை.

இவரது மனைவி பெயர் லெட்சுமி, தற்போது 70 வயதான நிலையிலும் ஏழை மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார் பாலகிருஷ்ணன்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஹொட்டலை தொடங்கிய பாலகிருஷ்ணனின் ஒரே குறிக்கோள் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்பதேயாகும்.

எந்தவொரு மனிதனும் பசியால் தூங்கக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம்.

தன்னுடைய சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்ட போது, பரோட்டா விற்பனை செய்வதை பார்த்துள்ளார்.

அதை வாங்கிகூட சாப்பிட முடியாத நிலையில் இருந்துள்ளது பாலகிருஷ்ணனின் குடும்பம், அதனாலேயே மிக குறைவான விலைக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தாராம்.

வெறும் 25 பைசாவில் தொடங்கிய பரோட்டா விற்பனை, தற்போது 2 ரூபாயில் வந்து   நிற்கிறது, இதற்கு மேல் விலையை ஏற்றம் செய்ய போவதில்லையாம்.

பரோட்டா தவிர, தோசை சப்பாத்தியும் இங்கு கிடைக்குமாம், ஆனால் அதன் விலை ரூ.5.

விலையேறிக் கொண்டே போகும் இந்த சூழலிலும் பாலகிருஷ்ணன்- லெட்சுமி தம்பதியின் சேவையால் மனம் நெகிழ்ந்து போகின்றனர் மக்கள்!!!

Related Articles

Leave a Reply

Back to top button