இலங்கைசெய்திகள்

தங்கம் வென்ற முல்லை மங்கையை நேரில் வாழ்த்திய சஜித்!

பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்குப் பெருமையைத் தேடித் தந்த முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனை கணேஷ் இந்துகாதேவி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை இன்று நேரில் சந்தித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய நகரில் பிறந்து உறுதி, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் பயணத்தின் விளைவாக பாராட்டத்தகு பெறுபேற்றைப் பிறந்த தாய்நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்தமைக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவருக்கு நிதி உதவியையும் இதன்போது வழங்கி வைத்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button