ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவுக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, கொரோனாத் தொற்றுக்குள்ளான 50ஆவது நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல ஆகியோருக்கு நேற்றுமுன்தினம் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.