இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

இலங்கையில் மிக மோசமான டெல்டா ப்ளஸ் கொரோனா திரிபு!

இலங்கையில் மிக மோசமான டெல்டா ப்ளஸ் கொரோனா திரிபு வைரஸ் பரவக்கூடிய எச்சரிக்கை நிலை காணப்படுவதாக இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு இதுவரை எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்றும் அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய கொரோனா வைரஸ் திரிபுகளைப் போன்றே டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் திரிபு வைரஸ் நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்டா பிளஸ் திரிபு வைரஸ் இந்தியா உட்பட பல நாடுகளில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இலங்கையில் இதுவரை அந்த வைரஸ் இனம் காணப்படவில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button