துயர் பகிர்தல்மரண அறிவித்தல்

துயர் பகிர்வு –  அமரர் பொன். நாகமணி பூரணம்!!

Death notice

கல்வயலைப் பிறப்பிடமாகவும் மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட  அமரர் பொன். நாகமணி பூரணம் அவர்கள் 14.03.2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமாகிவிட்டார். 

அன்னார், காலஞ்சென்ற சின்னப்பொடி – சின்னம்மாவின் அன்பு மகளும் காலஞ்சென்ற பொன்னன் – சின்னம்மா  ஆகியோரின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற வளர்மதி சன சமூக நிலைய ஸதாபகர் பொன். நாகமணியின் பாசமிகு மனைவியும் கருணைநாதனின் (கரன் – கனடா)  பாசமிகு தாயாரும்  தீபாவின் அன்பு மாமியாரும் காலஞ்சென்றவர்களான  சின்னத்துரை, பொன் நல்லையா மற்றும்  பொன். கந்தையா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்  வசந்தாதேவி,சிவபதி ஆகியோரின் சகலியும்  சுதாகரன்( சுவிஸ்), டினேஸ்( பிரானஸ்)பிரியா( கனடா)கார்த்திகா,( கனடா)அனுசுதன்( கனடா)அனுரதன் ( கனடா)ஆகியோரின் பெரிய தாயாரும் சித்தார்த், கரித், பூமிகா (கனடா)  , லீனா, டிசானா, டிசான் (பிரான்ஸ்) ஆகியோரின் பேர்த்தியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை வெள்ளிக்கிழமை (17/3/23) முற்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று, பூதவுடல் வளரமதி   சனசமூக நிலையத்தில்  விசேட அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அஞ்சலி உரைகளின் பின் தகனக் கினியைக்காக மட்டுவில் சின்னத்து இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,  உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்

குடும்பத்தினர்

Related Articles

Leave a Reply

Back to top button