இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 1,259 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 25 ஆயிரத்து 804ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 15 ஆயிரத்து 733 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 373 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
அதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 94 ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ளது.