இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்
வவுனியாவில் 20 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் நடைபாதை அமைக்கும் பணி ஆரம்பம்
வவுனியாவில் இருபது மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நடைபாதை அமைக்கும் பணிகள் நகரசபையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகரசபை தவிசாளர் இ.கௌதமன் (E. Gauthaman) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நூறு நகரங்களை அழகுபடுத்தும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டத்தின் கீழ் வவுனியா நகரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், முதற்கட்டமாக வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து, பொது வைத்தியசாலை சுற்றுவட்டம் வரையான வீதிக்கரையில் அதனை அமைப்பதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருபது மில்லியன் ரூபாய் நிதியில் நகரசபையின் மேற்பார்வையில் துரிதமாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்துள்ளார்.