இலங்கை

ஐ.தே.கவின் கொழும்பு மாநகர சபை ‘பட்ஜட்’ நிறைவேற்றம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழுள்ள கொழும்பு மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் 79 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 90 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

கொழும்பு மாநகர சபையில் நேற்று பாதீடு முன்வைக்கப்பட்டது. இரவு 9 மணிவரை விவாதம் இடம்பெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பின் பாதீடு நிறைவேறியது.

கொழும்பு மாநகர சபையில் 119 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் நிலையில் 101 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button