இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

சிகரெட் விலையும் அதிகரிப்பு?

வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் சிகரெட் விலை அதிகரிக்கப்படும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிகரெட்டுகளுக்கான விலை சூத்திரத்தின் விளைவாக இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வரும் எனவும் புகைபிடிப்பதை கட்டுப்படுத்தும் முயற்சியில் விலை சூத்திரம் முன்வைக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை எனவும் இதன்படி, சிகரெட் ஒன்றின் விலை 5ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் ஐந்தாண்டுகளில் 20 ரூபாயால் விலை அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்களால் தயாரிக்கப்பட்ட விலைச்சூத்திரம் சுகாதார அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு நாளில் 60 க்கும் மேற்பட்ட நபர்கள் புகைபிடிப்பதால் இறக்கின்ற அதேவேளை ஒரு வருடத்தில் 22,000 உயிர்களை நாங்கள் இழக்கிறோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button