இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

CEYPETCO எரிபொருள்களின் விலையும் அதிகரிப்பு!

லங்கா IOC நிறுவனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளதன் காரணமாக தங்களது எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிக்க நேரிட்டுள்ளதாக இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் ஐந்து ரூபாய் விலை அதிகரிப்பானது தமது கூட்டுத்தாபனத்திற்கு போதுமானதல்லவென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லங்கா IOC நிறுவனம் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளை அதிகரித்துள்ள நிலையில் மக்கள் சிபெட்கோ (CEYPETCO) எரிபொருள் நிரப்பு நிலையங்களை நாடியுள்ளனர்.

நேற்றைய தினம் CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

சில CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ‘பெற்றோல் இல்லை’ என்ற அறிவித்தல் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button