நிதி அமைச்சர் பசில்கூறியுள்ள இரகசியம்
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா என ஊடகவியலாளர்கள் இன்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் (Basil Rajapaksa) வினவியுள்ளனர்.
கே. அமைச்சரே, அறிமுக பட்ஜெட் பற்றி சில வார்த்தைகள் கூற முடியுமா?
பதில். “அது ஒரு இரகசியம்.”
கே. இந்த வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் என்ன பெறுகிறார்கள்?
பதில். வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக, பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு பதிலாக, பொதுமக்களிடமிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் சீமெந்து தட்டுப்பாடு மேலும் மோசமடைந்து வருகின்றது. 50 கிலோ எடையுள்ள சிமென்ட் மூட்டையின் விலை சுமார் 950 ரூபா முதல் 1000 ரூபா வரை இருந்த நிலையில், அக்டோபர் 11ம் திகதி 1,098 ரூபாவாக உயர்த்தப்பட்டது.
ஆனால் இன்றும் பல பகுதிகளில் சிமென்ட் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், கட்டுமான தொழிலாளர்கள் மட்டுமின்றி, சிமென்ட் கற்கள், பூந்தொட்டிகள், தோட்டம் அமைக்கும் பொருட்கள் உற்பத்தி செய்பவர்களும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இதனிடையே, சீமெந்து நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் கோரி குளியாப்பிட்டியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.