இலங்கைசெய்திகள்தொழில்நுட்பம்
ரோபோ தொழில் நுட்பம் புதிய பாடத்திட்டத்தில் முக்கிய இடம்பெறுகின்றது
Srilanka
2024 முதல் அறிமுகம்
தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களின் பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவுப் பாடத்தை( ரோபோ தொழில் நுட்பம்)தரம 8இல் இருந்து ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் எதிர்காலம் தொழிநுட்பத்தில் தங்கியுள்ளது எனவும் செயற்கை நுண்ணறிவு( artificial intelligence) பிரதான பாடத்திட்டத்தில் இணைக்கப்படும் எனவும் மாணவர்கள் IT பாடத்துடன் சேர்த்து கற்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து கல்வி மாற்ற செயல்முறைகளுக்கு அடிப்படையான கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் கொள்கைக்கு இரண்டு வாரங்களில் அமைச்சரவை அமைச்சர்களின் ஒப்புதல் பெறப்பட உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.