இலங்கைசெய்திகள்

பேஸ்புக் விருந்தில் கலந்துகொண்ட 38 பேர் கைது!

கண்டி நகரில் பேஸ்புக் விருந்தில் பங்குகொண்ட 38 இளைஞர், யுவதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக் அழைப்பு மூலம் இவர்கள் மேற்படி விருந்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் என்பவற்றையும் கண்டிப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி விருந்துக்கு வருகை தந்தவர்கள் கண்டியைச் சூழவுள்ள பிரபல வர்த்தகர்களின் பிள்ளைகள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் சொகுசு வாகனங்களில் வந்தே மேற்படி விருந்தில் கலந்துகொண்டனர் எனவும் பொலிஸார் மேலும் கூறினர்.

இதில் 21 முதல் 24 வயதுடைய நான்கு யுவதிகளும் உள்ளடங்குகின்றனர் எனத் தெரியவருகின்றது.

சந்தேகநபர்களை கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button