இந்தியாசினிமாசெய்திகள்

அதிக தியேட்டர்களில் வெளியாகும் முதல் தமிழ் இதுதான்.. மாபெரும் சாதனை படைத்த அண்ணாத்த

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.

நவம்பர் 4ம் தேதி தீபாவளியன்று இப்படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. தமிழ்நாடு, பிறமாநிலங்கள் தவிர, உலகம் முழுவதும் படத்தை 1193 தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள்.

ஆம், அமெரிக்காவில் அதிகபட்சமாக 677 தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறதாம்.

மேலும், ஐக்கிய அரபு நாடுகளில் 117, மலேசியாவில் 110, இலங்கையில் 86, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் 85, ஐரோப்பிய நாடுகளில் 43, யுனைட்டெட் கிங்டம் 35, சிங்கப்பூர் 23, கனடா 17 என மொத்தமாக 1193 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

வெளிநாடுகளில் அதிகமான தியேட்டர்களில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் அண்ணாத்த தானாம்.

தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களிள் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஆந்திரா, தெலங்கானா, கேரளா, வட இந்தியா என 1000 தியேட்டர்களில் வெளியாகவும் வாய்ப்புள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button