இலங்கைசெய்திகள்

புகையிரதம் மோதி ஒருவர் பலி!!

திருகோணமலை தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை பகுதியில் புகையிரதம் மோதி இளம் குடும்பஸ்தர் பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முள்ளிப்பொத்தானையைச் சேர்ந்த 21 வயதுடைய இளம் குடும்பஸ்தரான ஹமீட் முபீட் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று மாலை கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த ரயில் மோதி பலியாகியுள்ளார். காதில் ஹெட்செட் அணிந்த நிலையில்இ கையடக்கத் தொலைபேசியுடன் ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்த போதுஇ இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம்இ கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவித்த தம்பலகாமம் பொலிஸார் இசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Related Articles

Leave a Reply

Back to top button