இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

நான்காவது கோவிட் தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ள முடியும்! – விசேட அறிவிப்பு

மாடர்னா அல்லது ஃபைசர் தடுப்பூசிகள் இரண்டு அளவுகளில் பெற்வர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி பெற்ற மருத்துவ நிலைமைகளைக் கொண்ட பெரியவர்கள் நான்காவது தடுப்பூசியைப் பெற முடியும் என்று மத்திய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“மிதமான மற்றும் கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் மொத்தம் நான்கு கோவிட் 19 தடுப்பூசி அளவைப் பெறலாம்” என்று நோய் கட்டுப்பாட்டு மையங்கள் தெரிவித்துள்ளன.

செவ்வாயன்று வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, நோய் கட்டுப்பாட்டு மையமானது 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு ஓகஸ்ட் மாதம் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியது.

அந்த வகையில், நான்காவது தடுப்பூசி பூஸ்டர் தடுப்பூசி பெற்று குறைந்தது ஆறு மாதங்களுக்குப் பிறகு பெறப்பட வேண்டும் என நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

நோய் கட்டுப்பாட்டு மையமானது மாடர்னா அல்லது ஃபைசர் தடுப்பூசிகளுக்கு இப்போது அனுமதிக்கப்பட்ட மூன்றாவது அளவுகளை பூஸ்டர்களாக கருதவில்லை.

சில மருத்துவ நிலைமைகள் மற்றும் சிகிச்சைகள் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க மற்றும் தக்கவைத்துக்கொள்வதை கடினமாக்குகிறது.

இதன் காரணமாக நான்காவது அளவு தடுப்பூசி தேவைப்படுவதாக நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button