பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்றனர் – ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள்!!
Seminar
புலமைச்சிகரம் ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் முன்னெடுத்த தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு நேற்று முன்தினம் நிறைவு பெறறது.
தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்காக ஐவின்ஸ் தமிழ் இணையதளம், புலமைச்சிகரம் ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக வருடாவருடம் மாதிரி வினாத்தாள் வெளியீடும் சூம் ஊடான கருத்தரங்கும் முன்னெடுத்து வருவது வழமையாகும்
சூம் (zoom) ஊடாக முன்னெடுக்கப்பட்ட குறித்த கருத்தரங்கில் நாடு முழுவதும் 5000 இற்கு மேற்பட்ட மாணவர்கள் நேரடியா கலந்து பயன்பெற்றுள்ளனர்.
இக்கருத்தரங்கில் வளவாளர்களாக புலமைப்பரிசில் பிரபல ஆசிரியர்கள் வழிகாட்டுதல் வகுப்புகளை முன்னெடுத்திருந்தனர்.
06.09.2023 தொடக்கம் 04.10.2023 வரை இடம்பெற்ற கருத்தரங்கில், வளவாளர்கள் மற்றும் மாணவர்கள் தமது இருப்பிடத்திலேயே எழுந்து நின்றபடி, ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் அவர்களுக்கு ஒரு நிமிட அகவணக்கத்தைச் செலுத்திய பின்னரே கருத்தரங்கு ஆரம்பமானது.
தென்மராட்சியின் பிரபல ஆசிரியரும் யாழ் அறுவடை வெளியீட்டு ஆசிரியருமான திரு. சிவ. தீபன்,
யாழ். பிரபல ஆசிரியரும் புலமை ஒளி, புலமை ஆரம் ஆசிரியருமான அளவையூர் திரு. கே. ஜெயரமணன்,
திருமலை மாவட்ட முன்னணி ஆசிரியரும் யாழ் பார்வை, யாழ் ஆசான் ஆசிரியருமான திரு. ஆ. ஜெயநேசன்,
புலமைத்தேடல் வெளியீட்டு ஆசிரியர் திரு. செ. நிஷாந்தன்,
அதிபரும் முன்னாள் புலமைச்சிகரம் ஆசிரியருமான திரு. தி. திலீப்குமார்
யாழ். பிரபல அன்பொழி கல்வி நிலைய ஆசிரியர் திரு. பி. பத்மநேசன்
கொழும்பு மாவட்ட முன்னணி ஆசிரியர் திரு. எஸ். ஏ. சந்திரபவன்
யாழ் பிரபல ஆசிரியரும் குறிஞ்சி வெளியீட்டு ஆசிரியருமான திரு. சண்.சுதர்சன்
ஆகியோர் பங்காற்றிய நிலையில்,
அமரர் ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் அவர்களின் வினாத்தாளும் வெளியிடப்பட்டது.
இக்கருத்தரங்கில் பிரதம விருந்தினர்களாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முதல்வர் உயர்திரு. ச. லலீசன் அவர்களும், ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளரும் எழுத்தாளருமான உயர் திரு.செ. மகேஷ் அவர்களும் உதயன் குழும பணிப்பாளர் உயர் திரு. ஈ. சரவணபவன் அவர்களும் ஓய்வு பெற்ற அதிபரும் மட்டுவில் வளர்மதி கல்விக் கழக பொறுப்பாசிரியருமான உயர் திரு ச. கிருஷ்ணன் அவர்களும் யாழ். இந்துக் கல்லூரி உதவி அதிபர் உயர் திரு. என். விமலநாதன் அவர்களும் யாழ். மத்திய கல்லூரி முதல்வர் உயர் திரு. எஸ். இந்திரகுமார் அவர்களும் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை முன்னாள் அதிபர் உயர் திரு. சு. தியாகலிங்கம் அவர்களும் தென்மராட்சி கல்வி- தொழில் வழிகாட்டி உத்தியோகத்தர் க. ஈஸ்வரன் அவர்களும் பங்கு கொண்டு பெற்றோர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி தமது கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.
கருத்தரங்கின் போது மிகச்சிறப்பான முறையில் வட்சப் மூலம் பதில் அனுப்பி வெற்றியீட்டிய மாணவர்கள் திறமையின் அடிப்படையில் இனங்காணப்பட்டு ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக பரிசில்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன.
இக்கருத்தரங்கை வெற்றிகரமாக முன்னெடுக்க உதவியாக இருந்த மாணவர்கள், பெற்றோர்கள், வளவாளர்கள், பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்ட சான்றோர்கள், இவர்களுடன் அமரர் ஆசிரியர் வே. அன்பழகனின் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளைத் ஐவின்ஸ் தமிழ் சாரபாக தெரிவித்துக் கொள்கின்றோம்.